கேஜிஎஃப் படத்தில் நடித்த கதாநாயகியான ஸ்ரீநிதி விஜயை பற்றி பேசியுள்ளார்.
சென்ற தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸானது. இத்திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ளது. இந்த படம் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ரீநிதி.
இந்நிலையில் அண்மையில் ஸ்ரீநிதி விஜய்யை பற்றி பேசி இருக்கின்றார். அவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். இவர் சிறு வயதிலிருந்தே விஜயின் தீவிர ரசிகையாம். விஜயின் படங்களை திரையரங்கிற்கு சென்று தான் பார்ப்பாராம். பிகில், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை திரையில் பார்த்து மகிழ்ந்த ஸ்ரீநிதி தற்போது பீஸ்ட் படத்தையும் தியேட்டரில் பார்க்க இருக்கின்றாராம். பீஸ்ட் படத்திற்கு போட்டியாக வெளியாகி கேஜிஎப் திரைப்படம் அதிக வசூலை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.