Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கேஜிஎஃப் 3 பாகம் குறித்த தகவலை வெளியிட்ட படக்குழு…. கவலையடைந்த ரசிகாஸ்…. என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே…???

கேஜிஎஃப் மூன்றாம் பாகம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டதை கேட்ட ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சென்ற 2018 ஆம் வருடம் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் திரைப்படத்தின் பாகம்-1 ரிலீசானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது. இதையடுத்து 4 வருடங்களுக்கு பிறகு கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளிக் குவித்தது. மேலும் ஆயிரம் கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது.

இதனால் ரசிகர்களுக்கு மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. சில நாட்களாக கேஜிஎப் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி 2024 ஆம் வருடம் வெளியாகும் என செய்தி வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்பொழுது கேஜிஎஃப் மூன்றாம் பாகத்தை தற்போதைக்கு துவங்கும் எண்ணம் இல்லை எனவும் படம் தொடங்கும் பொழுது அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடுவோம் என படக்குழு கூறியுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Categories

Tech |