கேஜிஎப் படத்தை தயாரித்த பிரபல நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கன்னட நடிகரான யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் யாஷ் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்த கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றது. இந்நிலையில் கேஜிஎப் படத்தை தயாரித்த Hombale Films நிறுவனம் இன்று காலை மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
The merging of two great dreams! Ushering of the New Era of Entertainment. pic.twitter.com/DKUdiwtyHP
— Hombale Films (@hombalefilms) April 9, 2022
இரண்டு படங்களின் மிகப்பெரிய கனவு ஒன்றாக இணையப்போகிறது எனவும் அறிவித்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் திரைப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகப் போவதாக தெரிவித்து வருகின்றனர்.
அதாவது இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாசை வைத்து சிலர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தை Homebale Films நிறுவனம் தயாரிக்கிறது. எனவே கேஜிஎப் திரைப்படத்தின் இடைவெளியின் போது திரைப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.