Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கேஜிஎப்’ பட இயக்குனருடன் இணையும் ஜூனியர் NTR… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க  இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவரும் நடிகர் ராம் சரணும் இணைந்து பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து நடிகர் என்.டி.ஆர் கொரட்டலா சிவா இயக்கும் NTR 30 படத்தில் நடிக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து இவர் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு NTR 31 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

Categories

Tech |