‘கே ஜி எஃப் 2’ டீசர் 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது .
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே ஜி எஃப். கன்னடத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழ், மலையாளம் ,ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது . தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது .
https://twitter.com/hombalefilms/status/1371409871967375364
இந்த படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரமேஷ் ராவ், ரவீனா டாண்டன் ,ஸ்ரீநிதி சிட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் கே ஜி எஃப் 2 படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தை கலக்கியது . மேலும் இந்த படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் 175 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிரட்டலான சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.