‘கேஜிஎப் 2’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குனர் பிரசாத் நீல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் .
கடந்த 2018-ல் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த திரைப்படம் கே ஜி எஃப். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ரமேஷ் ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது .
https://twitter.com/prashanth_neel/status/1374361293658890244
மேலும் இந்தப் படம் வருகிற ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை இயக்குனர் பிரசாத் நீல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . அதில் அவர் இந்த படத்தின் ஹீரோ யாஷ் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.