கடை உரிமையாளரின் அனுமதியின்றி சமோசா சாப்பிட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் உள்ள சோலோ என்ற பகுதியில் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு சீதாராமன் என்ற மகன் உள்ளார். இருவரும் சேர்ந்து கடையை நடத்தி வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது கடைக்கு வினோத் என்பவர் வந்துள்ளார். பயங்கர போதையில் இருந்த அவர், கடை உரிமையாளரிடம் கேட்காமலேயே அங்கிருந்த சமோசாவை எடுத்து சாப்பிட முயன்றுள்ளார்.
அதனால் கடும் கோபமடைந்த கடை உரிமையாளர் ஹரி, வினோத்தை கண்டித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது டீ போடும் பாத்திரம் மற்றும் பெரிய கம்பை கொண்டு இருவரும் வினோத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வினோத் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இரு குடும்பத்தினருக்கும் முன்பாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.