Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேட்ச்களை தவறவிட்ட ஜடேஜா…. கிண்டல் செய்து டுவீட் போட்ட அமித் மிஸ்ரா..!!!!

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.  இந்த போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணியின் பேட்டிங் போது சென்னை அணியின் ஃபீல்டிங் மிக மோசமாக இருந்தது.

குறிப்பாக கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்த ஃபீல்டராக கருதப்படும் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா 2 முறை கேட்ச்களை தவறவிட்டார். அதிலும் குறிப்பாக 12-வது ஓவரில் மும்பை அணியின் ஹ்ரித்திக் கொடுத்த எளிதான கேட்சை ஜடேஜா தவறவிட்டார். ஜடேஜாவை தொடர்ந்து சிவம் துபே ஒரு கேட்சை தவறவிட்டார்.

அணியின் விக்கெட் கீப்பர் டோனி ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டார். இந்த நிலையில் ஜடேஜா தவறவிட்ட கேட்சிற்கு அமித் மிஸ்ரா, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடியை கிண்டல் செய்துள்ளார். இது குறித்து அமித் மிஸ்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ” ஜடேஜா கேட்ச்களை தவறவிடுவதும் , டோனி ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிடுவதும் ஷஹீத் அப்ரிடி கண்களை திறந்து விவேகத்துடன் பேட்டிங் ஆடுவது போன்றது. யாராலும் நம்பமுடியவில்லை ” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |