Categories
சினிமா

கேட்டதும் 1 லட்சத்தை நீட்டிய விஜய் சேதுபதி…. மனம் நெகிழ்ந்த போண்டா மணி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான போண்டாமணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிகர் நடிகைகள் யாராவது உதவவும் முன் வர வேண்டும் எனவும் கூறி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர்.

அவ்வகையில் நடிகர் வடிவேலு போண்டா மணியின் மருத்துவ செலவுக்கு உதவுவதாக நேற்று அறிவித்திருந்தார். மேலும் அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் உதவுவதாக வாக்குறுதி கொடுத்து வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சிகிச்சைக்காக அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். இந்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம்  என போண்டாமணி நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |