சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க.
அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் இன்னும் சிலரும் இங்கு வந்தோம். வந்த உடனே வாசலில் நின்ற காவலர்கள் போலீஸ் எங்களை பார்த்த உடனே வணக்கம் வைத்து மரியாதை கொடுத்து கேட்டை திறந்து விட்டார்கள். நன்றாக கவனிக்கவும், கேட்டை திறந்து விட்டாங்க. அதற்குப் பிறகு நாங்கள் உள்ளே வருகிறோம்.
உள்ளே வந்தவுடன் கீழே அமர்ந்து கொண்டு ஆயிரக்கணக்கான மாணவியர்கள் போராட்டத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க. ரொம்ப மரியாதையுடன் கதவை திறந்து விட்டாங்க. அப்படி கல்லூரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவிகளை எல்லாம் நாங்கள் சந்தித்தோம். ரொம்ப நேரம் கூட இல்ல ஒரு ரெண்டு நிமிஷம், மூணு நிமிஷம், நாலு நிமிஷம் தான் இருக்கும்.
தைரியமா இருங்க நல்ல காரியத்திற்காக நீங்க போராடுறீங்க, உங்க போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும். நாங்க உங்களுக்கு எப்போதும் துணை நிற்போம். கலைஞர் அவர்கள் எங்களுக்கு செய்தி சொல்லி அனுப்பினார். தொலை பேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு சொல்லி விட்டு வர சொன்னார். எனவே நாங்கள் ஆதரவு தருகிறோம். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம், ஆனால் அமைதியாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டு நாங்கள் சென்றோம்.
போகும்போது கூட கேட் மூடி இருந்தது. அப்போதும் கேட்டை திறந்து விட்டாங்க. வரும்போதும், போகும்போதும் கேட்டை திறந்து விட்டாங்க. ஆக வந்து மாணவிகளை சந்தித்து விட்டு ஊக்கப்படுத்திவிட்டு, உற்சாகப்படுத்திவிட்டு வெளியில் திரும்பும் போது மூடி இருந்த கேட் திறக்கபடுது நாங்கள் வெளியே போகிறோம்.
இது நடந்தது பகல் 2 மணி, இரண்டரை மணி இருக்கும். நாங்க உள்ளே வந்து ஆறுதல் சொல்லிவிட்டு போனோம். இரவு 12 மணிக்கு நான் வேளச்சேரியில் இருக்கிறேன். அப்போது வேளச்சேரியில் தான் எனது வீடு, போலீஸ் வந்துவிட்டது. எதுக்கென கேட்டேன். கைது பண்ண வந்திருக்கிறோம் என்று சொன்னாங்க, எதுக்குன்னு கேட்டேன். ராணி மேரி கல்லூரியில் போராடிக் கொண்டிருக்கக்கூடிய மாணவிகளை எல்லாம் நீங்கள் கேட்டு ஏறி குதித்து உள்ளே போயிட்டு வந்து இருக்கீங்க. அதுக்காக கைது, வழக்கு என்னன்னா கேட்டு ஏறி குதிச்சதாக வழக்கு.
ஆக கைது செய்து எங்களைக் கொண்டு போய் சிறையில், அது எந்த சிறை என்று கேட்டால் பொன்முடி போன்றவர்கள் எல்லாம் கைது செய்து சிறையில் போட்டாங்க. கடலூர் சிறையில் கொண்டு போய் அடைத்தாங்க. ஒரு மாத காலம் சிறையில் இருந்தோம். இங்ககூட முதல்வர் அவர்கள் துன்பப்பட்டாங்க என்று சொன்னாங்க. ஆனா நாங்க துன்பப்படவில்லை, துன்பமாக கருதவில்லை, மகிழ்ச்சி அடைந்தோம்.
உங்களுக்காக மாணவிகளுக்காக அதனை நாங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம். ஒரு மாத காலம் இருந்தோம், அதில் எனக்கு என்ன பெருமை என்று கேட்டீர்கள் என்றால் நான் ஏற்கனவே சொன்னேன். ராணி மேரி கல்லூரி வளாகத்திற்கு கேப்பர் என்று பெயர், கடலூரில் கொண்டு போய் எங்களை சிறையில் போட்டாங்கல்ல. அந்த சிறைக்கு என்ன பெயர் என்று கேட்டீங்கன்னா கேப்பர் சிறை. எவ்வளவு பொருத்தம் பாருங்க.
ஆக அதனால்தான் நான் சொன்னேன். எனது வாழ்நாளில் மறக்க முடியாத எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும் இந்த கல்லூரிக்காக போராடிய, மாணவிகளுக்காக போராடியதற்காக அதை நினைத்துப் பார்க்கும்போது மறக்க முடியாத சம்பவமாக என்னை பொறுத்தவரையில் அமைந்துள்ளது என ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.