Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கேட்ட சான்றிதழை கொடுங்க…. தேர்தலைப் புறக்கணிக்கப் போகிறோம்…. சாலை மறியலில் இறங்கிய சங்க உறுப்பினர்கள்….!!

உசிலம்பட்டியில் 68 சமுதாய மக்களுக்கு டி என் டி சான்றிதழ் வழங்கக்கோரி இரு சங்கத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தேவர் சிலை முன்பாக வடமாநில தமிழர்கள் கூட்டமைப்பும் சீர்மரபினர் சங்கமும் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு தரப்பினர்களும் காவல்துறையினரிடம் கூறியதாவது, இந்திய நாட்டிலுள்ள அனைத்து சீர்மரபினர் மற்றும் பிரமலைக்கள்ளர் உள்ளிட்ட 68 சமுதாய மக்களுக்கு டி என் டி என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் இந்தக் கோரிக்கையை முன்னிட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர் .

Categories

Tech |