ரேஷன் அரிசி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ரயில் நிலையம் அருகே சில சாக்கு மூட்டைகள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸலாஸ் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.
அவர்கள் சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம் 1 டன் அரிசி இருந்தது. இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.