நுழைவாயில் கதவை திறக்க தாமதமான காரணத்தினால் காவலாளியை ஒரு பெண் கடுமையான தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்திரபிரதேசம் மாநிலம், நொய்டா மாவட்டம் ஜேபி விஷ் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு இன்று இளம் பெண் ஒருவர் தனது காரில் வந்தார். அப்போது அந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நுழைவாயில் கதவை திறப்பதில் சற்று தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் காரை விட்டு இறங்கி அங்கு பணியில் இருந்த காவலாளியுடன் வாக்குவாதம் செய்தார்.
These #Noida security guards are clearly forced to exercise restraint coz they know the real consequences of actually defending themselves. Then it won’t matter what the woman spewed against them. They are forced to just take the assault and abuse #GreaterNoida #assault pic.twitter.com/27RWorJxyo
— Ayushman Singh Jamwal (@JamwalNews18) August 21, 2022
அதைத்தொடர்ந்து தகாத வார்த்தைகளால் அவரை திட்டியும் தாக்கினார். பின்னர் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி பிகாரி சமூகம் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். காவலாளியை பெண் தாக்குவதும் அவதூறாக பேசிய வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து பணியில் இருந்த காவலாளி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து காவலாளிகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்து தாக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.