Categories
தேசிய செய்திகள்

கேந்திரியா வித்யாலயா எம்பி கோட்டா ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யப்போவதாக கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை பள்ளி நிர்வாகம் தரப்பில் பரிந்துரை கடிதம் எதுவும் பெறக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 1975 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், கேந்திரிய வித்யாலயா ஆளுநர்கள் குழு, அதன் கூட்டு நடவடிக்கைக் குழுக்கள், சட்ட அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களின் விளைவாக தொடர்ந்து வருகிறது. மேலும் இந்த சிறப்பு சலுகைத் திட்டம் 3 முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு எம்.பி.யும் கேந்திரிய வித்யாலயாக்களில் 10 மாணவர்களை சேர்க்கைக்கு பரிந்துரைக்க இத்திட்டம் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |