Categories
மாநில செய்திகள்

“கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்”…. இவர்களுக்கான மாணவர் சேர்க்கை திடீர் நிறுத்தம்….!!!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கை திடீரென்று நிறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கே.வி., பள்ளி முதல்வர்களுக்கு அதன் சங்கதன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 1,248 கே.வி., பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 15 லட்சம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவற்றில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30 கே.வி., பள்ளிகள் இயங்குகின்றன. கே.வி.,பள்ளிகளில் வருடந்தோறும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் 1ஆம் வகுப்பு மற்றும் மற்ற வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நடத்தப்படும். இந்த வருடத்துக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு சென்ற மாதம் தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

வருடந்தோறும் கே.வி., பள்ளி மாணவர் சேர்க்கையில் ஒவ்வொரு மாநில எம்பிக்களுக்கும் தலா 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது. ஆகவே அவர்களுடைய பரிந்துரை கடிதங்கள் பெறப்பட்டு மாணவர் சேர்க்கையானது வழங்கப்படும். இதற்கு லோக்சபா, ராஜ்யசபா மற்றும் நியமன எம்பிக்களும் பரிந்துரைக்கலாம். இந்த நிலையில் அனைத்து கே.வி., பள்ளி முதல்வர்களுக்கும் கே.வி., சங்கதன் தலைமை அலுவலகத்திலிருந்து நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட அவசர கடிதத்தில் “எம்.பி.,க்களின் பரிந்துரை கடிதத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, இந்த வருடம் வழங்கப்படாது.

இதனை சம்பந்தப்பட்ட பெற்றோருக்கும், எம்.பி.,க்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக எம்.பி., கடிதம் பெற்று மாணவர் சேர்க்கைக்கு காத்திருந்த பெற்றோர் கவலை அடைந்து உள்ளனர். பொதுவாக கே.வி., பள்ளிகளின் எம்.பி.,க்களின் சிறப்பு ஒதுக்கீட்டில் இடைத்தரகர்கள் புகுந்து, பெற்றோரிடம் பல்வேறு லட்ச ரூபாய் கையூட்டு பெற்று, எம்.பி.,க்களின் பரிந்துரை கடிதத்தை தவறாக பயன்படுத்துவதாக சென்ற பல வருடங்களாக புகார்கள் எழுகிறது. இந்நிலையில் தான் எம்.பி.,க்களின் சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை, இந்த வருடம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 480 மாணவர்களுக்கும், தமிழகத்தில், 300 மாணவர்களுக்கும், கே.வி., பள்ளிகளின் பொதுவான விதிப்படி சிறப்பு பரிந்துரைகள் இன்றி கூடுதல் சேர்க்கை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |