நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பதாரர்கள் மிக கவனமுடன் சரியான விவரங்களை வழங்க வேண்டும்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மட்டும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும்.விண்ணப்ப பதிவு முடிந்தவுடன் தேர்வு வாரியா கட்டுப்பாட்டு அதிகாரிகளால் விண்ணப்ப பதிவை சரிபார்க்க நவம்பர் 23ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.