Categories
தேசிய செய்திகள்

கேன்சர் நோயாளிகளுக்கு பென்சன்…… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மாநில அரசு சார்பில் மாதம் தோறும் 2500 பென்ஷன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் யாருக்கெல்லாம் பென்சன் கிடைக்கும் என்பது பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பென்ஷன் திட்டம் ஒன்றை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு நிறைவடைந்த பிறகு அவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வு தொகை மூத்த குடிமக்களுக்கு நிதி நெருக்கடி காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசும் தற்போது மூத்த குடிமக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு வகையான பென்சன் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் ஹரியானா மாநில அரசு புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு என்று ஒரு பென்சன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் “அடல் கேன்சர் பென்சன் திட்டம்”. இதனை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.  இத்திட்டம் மூலமாக மாதம் 2500 ரூபாய் வரை புற்றுநோயாளிகளுக்கு பென்ஷன் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமில்லாமல் தலசீமியா மற்றும் ஹீமோபிலியா உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 2500 மாதம்தோறும் பென்ஷன் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் நோயாளிகளுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஏழை மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |