குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் வழக்குகள் வருவதால் உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சென்னை போன்ற முக்கிய நகரங்களில் செயல்படும் சில குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மீது தொடர் புகார்கள் வருவதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் உணவு பாதுகாப்பு துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும் தரமற்ற நீரை அருந்துவதனால் காலரா, டைபாய்டு, அமிபியாசிஸ், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட தரங்கள் குறைவாக இருந்தால் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தரங்களில் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறை உரிமம் மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பின் வழங்கப்படும் உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பாட்டில் குடிநீர் உற்பத்தியின் போது அதன் தரம் குறித்த ஆய்வு செய்த பின்னர் நிகழ்வு பயன்பாட்டிற்கு வினியோகம் செய்ய வேண்டும்.
உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளில் விதிகளின்படி கேண்களின் மீது உள்ள லேபிள்கள்லில் உணவு பாதுகாப்பு துறையின் உரிமை இந்திய தர நிர்ணய அமைப்பால் வழங்கப்பட்ட உரிமை தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரியை தயாரிப்பு தேதி, பயன்படுத்தக்கூடிய கால அளவு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இடம்பெற வேண்டும் தரம் குறைவான என அறிக்கை பெறப்பட்ட பாட்டிலில் குடிநீரை உற்பத்தி செய்த தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது நீதிமன்றத்தில் 334 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 225 வழக்குகள் கீழ் வழங்கப்பட்டு 39.69 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு துறையின் மூலம் கண்காணிப்புகள் நடைபெற்று வருகின்றன. பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 வாட்ஸ் எண்ணிற்குஅல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறை புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.