தமிழகத்தில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு அரசு சார்பாக கேபிள் டிவி நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறை கேபிள் ஒளிபரப்பு முறை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக மக்களுக்கு தொலைக்காட்சிகளில் HD சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் கேபிள் டிவி சந்தாதாரர்கள் அனைவருக்கும் செட்டாப் பாக்ஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அலுவலக செயல்பாடுகள் குறித்து நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேபிள் டிவி நிறுவனத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த ஆறு வருடங்களில் புதிய தொழில்நுட்பங்களை வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாகிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.