Categories
மாநில செய்திகள்

கேபிள் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து முதல்வர் ஆலோசனை… தமிழக அரசு புது முயற்சி…!!!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அரசு கேபிள் டிவி நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 -இன் கீழ் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்கும் 2007 -ஆம் வருடம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் 2017 -ஆம் வருடம் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டி.ஏ.எஸ் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவச தரநிலை வரையறை செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 2017 -ஆம் வருடம் டிஜிட்டல் சேவையையும், அதனை தொடர்ந்து 2018 – ஆம் வருடம் ஹெச்டி சேவையும் தொடங்கியுள்ளது. இதில் செட்டாப் பாக்ஸ், ஹெச்டி பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 19.11.2022 அன்று ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் மீதமுள்ள இடர்பாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து முதல்வர் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் சந்தை நிலவரங்கள் ஆய்வு செய்து குறைவான கட்டணத்தில் சேவைகளை வழங்குவது குறித்தும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான VOD,OOT,IPTV வழங்கக்கூடிய ஹெச்டி செட்டாப் பாக்ஸ்களை அடுத்த 6 மாத காலத்தில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அதிக சந்தாதாரர்களை சேர்த்து இனிவரும் காலங்களில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்படவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Categories

Tech |