சுவிட்சர்லாந்தில் உள்ள Grisons மாகாணத்தில் ரயில்வே பணியாளர் ஒருவர் (வயது 61) ரயில் பாதையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கேபிள் ரயில் ஒன்றின் பின் பக்கத்தில் சிக்கியுள்ளார். இதனால் சுமார் 10 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்ட அந்த ரயில்வே பணியாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டரில் விரைந்து வந்து அவருக்கு அங்கேயே வைத்து சிகிச்சையளித்து, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.