கேப்சுலா முண்டி என்பது ஒரு கலாச்சார மற்றும் பரந்த அடிப்படையிலான திட்டமாகும். அதாவது ஒரு மனிதன் இறந்த பிறகும் உலகிற்கு பயன்படும் விதத்தில் அவரை மாற்றுவதுதான் கேப்சுலா முண்டி திட்டமாகும். அதன்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய சடலத்தை ஒரு முட்டை வடிவிலான பானையில் வைத்து மண்ணுக்குள் புதைக்க வேண்டும். அதற்குமேல் ஒரு மரத்தை நட்டு வைத்து வளர்க்க வேண்டும். இப்படி மரங்களை நட்டு வைப்பதன் மூலம் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கல்லறையாக இருக்காமல், காடுகளாக இருக்கும். இந்தத் திட்டத்தைத் இத்தாலியைச் சேர்ந்த அன்னா சிடெல்லி மற்றும் ரவுல் பிரெட்செல் ஆகிய 2 பேர்தான் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இறந்தவர்களின் உடலை முட்டை வடிவ பானையில் வைத்துப் புதைக்கும் போது அவர்களின் உடம்பில் ஜிபிஎஸ் வைக்கப்படும். இந்த ஜிபிஎஸ் மூலம் இறந்தவர்களின் சன்னதிகள் அவர்கள் இருக்கும் இடத்தை எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் இறந்தவர்களின் உடலை புதைக்கும் போது அவர்களுக்கு பிடித்தமான மரங்களை தான் முட்டை வடிவத்தில் மேல் நட்டு வைப்பார்கள். இந்த திட்டம் ஒரு நல்ல திட்டமாக இருக்கும் என நம்பப்படுகிறது.