ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் பெறுகிறார். இதையடுத்து இவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிராக தான் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். மிதாலி ராஜ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றதிலிருந்து ஒரு நாள் போட்டிகளில், 140 போட்டிகளில், 84 வெற்றிகளை பெற்றுள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலியா வீராங்கனை பெலின்டா கிளார்க் 83 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளிய மிதாலிராஜ் 84 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இதையடுத்து இவரது சாதனைக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.