Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் பதவியிலிருந்து விலகிய ஹார்திக் பாண்டியா…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, “ரஹானே, புஜாரா இருவரும் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும். அதேபோல் ரஞ்சிக் கோப்பையில் அவர்கள் கண்டிப்பாக பங்கேற்று தான் ஆக வேண்டும். மேலும் பார்ம் அவுட்டில் உள்ள சில வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்று தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டும்” என்று கங்குலி கூறியுள்ளார்.

அந்த வகையில் ஹார்த்திக் பாண்டியாவின் பெயரும் இந்த லிஸ்டில் உள்ளது. ஏனென்றால் கடந்த சில தொடர்களில் ஹார்திக் பாண்டியா பங்கேற்கவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டில் நடந்த அறுவை சிகிச்சையால் ஹார்திக் பாண்டியாவால் பந்து வீச முடியாமல் உள்ளதால் தற்போது அவர் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ரஞ்சிக் கோப்பையில் கங்குலி அறிவுரைப்படி ஹார்திக் பாண்டியா பங்கேற்று பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் ரெகுலராக விளையாடிய கூடிய பரோடா அணிக்கு ஹார்திக் பாண்டியா தான் கேப்டனாக இருப்பார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் ஹார்திக் பாண்டியா ரஞ்சிக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக கேதர் தேவ்தர் என்பவர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |