Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கேப்டன், மனைவி, மகன்…. தேர்தல் போட்டி…. தொண்டர்கள் விருப்பமனு …!!

தேமுதிக சார்பில் விஜயகாந்த், மனைவி பிரேமலதா, மகன் விஜயப்ரபாகரன் தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் விருப்ப மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர இருக்கின்றன. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து மக்களை சந்தித்து வருகின்றனர். கூட்டணி ஒருபுறம், விருப்பமனு ஒரு புறம் என பிரதான கட்சிகளான திமுக –  அதிமுக சென்றுகொண்டிருக்கும் அதே வேகத்தில் தேமுதிக, நாம் தமிழர், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பிலும் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தொண்டர்கள் சார்பாக விஜயகாந்த், மனைவி, மகன் தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் விருப்பமனு அளித்துள்ளனர்.  விருதாச்சலத்தில் விஜயகாந்தும், விருக்கம்பாக்கத்தில் பிரேமலதா போட்டியிட கோரி தேமுதிகவினர் விருப்ப மனு அளித்தனர். அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

Categories

Tech |