Categories
சினிமா தமிழ் சினிமா

கேப்டன் மில்லர் திரைப்படம்… தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் சந்தீப் கிஷான்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படகுழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கின்ற திரைப்படம் கேப்டன் மில்லர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்ற இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கின்றார்.

மேலும் இந்த படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பிரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் விரைவில் கலந்து கொள்ள இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்திப் கிஷான் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்து பட குழு இதனை அறிவித்திருக்கிறது.

Categories

Tech |