தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். மக்களால் செல்லமாக கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப் பட்டார். சினிமாவில் படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ அப்படியே அரசியலிலும் நன்றாக செயல்பட்டு வந்து கொண்டிருந்தார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சினை காரணமாக வீட்டிலேயே முடங்கினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எப்பொழுதும் மக்களுக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த் இப்பொழுதெல்லாம் மக்களை சந்திப்பதே கிடையாது.
கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடியுள்ளார். அப்போது விஜயகாந்த்தோடு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கள் கேப்டனா இது? இப்படி உடல் எடை குறைந்து எப்படி காணப்படுகிறார்? என்று வருத்தப்பட்டு வருகிறார்கள்.