Categories
அரசியல் மாநில செய்திகள்

கேப்டன் ஸ்டைலில் அதிரடி…! மொத்த குடும்பமும் கெத்து…. ஷாக் ஆன அதிமுக …!!

சர்ச்சையான கருத்துக்களை சொல்வது தேமுதிக சுதீஷுக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இந்த மாதிரியான கருத்துக்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். மேடையில் பேசுவதை தவிர்த்து முகநூலிலும் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஃபேஸ்புக்கில் விஜயகாந்த் காலில் பல கட்சி தலைவர்கள் விழுந்து கிடப்பது மாதிரியான ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்திருந்தார். இதற்கு கடுமையான விமர்சனம் எழுந்த போது 2016ஆம் ஆண்டு நாளிதழில் வெளியானதை தான் பகிர்ந்தேன். எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றுமுகநூல் பதிவை டெலிட் செய்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு நமது தலைவர் விஜயகாந்த், நமது கொடி தேமுதிக கொடி,  நமது சின்னம் முரசு  என ஒரு முகநூல் பதிவு போடார்.  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத சூழலில் சுதீஷ் கூட்டணியை எதிர்க்க கூடிய அளவில் இருந்த முகநூல் பதிவு அதிமுக கவனம் பெற்றது. பிறகு எதிர்ப்பு எழுந்ததால் அந்த முகநூல் பதிவு டெலிட் செய்யப்பட்டது.

அதே போல கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கட்சி தொடர்பான கூட்டத்தில் பேசும்போது கூட நாங்கள் யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை கூட்டணிக்காக என்ற கருத்தையும் தெரிவித்தார். அதே போல ஆரணியில் கட்சி நிர்வாகிகளிடம் பேசும் போது மிகவும் காட்டமான கருத்துக்களை சுதீஷ் பதிவிட்டார். அதே போல தற்போது பேசிய சுதீஷ், அதிமுக தான் கூட்டணிக்காக கெஞ்சுகிறது. நாம் கெஞ்சவில்லை. 2011ம் ஆண்டு தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி வைக்கவில்லை என்றால் அதிமுக என்ற கட்சியே இருக்காது. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு கொடுத்துள்ளார்கள். அந்த சமூக மக்கள் ஓட்டு போடுவார்கள் மற்ற ஜாதிக்காரர்கள் எப்படி ஒட்டு போடுவார்கள் என்ற கேள்விகளையெல்லாம் கேட்டுள்ளார்.

மாநிலங்களவை சீட்டுக்காக என்னைக்குமே ஆசைப்பட்டதில்லை. முறையாக தேர்தலில் நின்று ஜெயித்து பாராளுமன்றம் போடுவதுதான் நாங்கள் விரும்புகிறோம் என்று சொல்லியுள்ளார்.  ஏற்கனவே விஜயகாந்தின் மகன் கூட தன்மானம் ரொம்ப முக்கியம்,  தலைகுனிவு எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியுள்ளார். அதேபோல பிரேமலதா விஜயகாந்தும் கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார். எத்தனை நாட்கள் பொறுமையாக இருப்பது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கணும் என்ற கருத்தையும் சொல்லியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்,  விஜயகாந்த் மகன் பிரபாகரன், சுதீஷ் என மூன்று பேருமே கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த கூடிய மூன்று பேருமே கூட்டணிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் சுதீஷின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க வேண்டியிருக்கிறது. பொதுவாக விஜயகாந்த் அதிரடியாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். தற்போது கூட்டணிக்கு எதிராக கேப்டன் விஜயகாந்தின் குடும்பமும் பேசியுள்ளது, அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |