பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உஸ்தாத் ஹோட்டல், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநாத் பாசி. இவர் சமீபத்தில் நடித்த சட்டம்பி என்ற படம் குறித்து பிரபலமான மலையாள youtube சேனல் ஒன்றில் இருந்து பேட்டி எடுத்தனர். அப்போது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கியில் ஒரு கேள்வியால் எரிச்சல் அடைந்த அவர் பிறகு கேமராவை நிறுத்துமாறு கூறிவிட்டு, ஆபாசமாக திட்டி, மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகார் குறித்து பதில் அளித்த அவர் ஒவ்வொருவரும் அவமானப்படுத்தப்படும் போது என்ன செய்வார்களோ அப்படித்தான் நானும் பதில் அளித்தேன். வேறு எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்.