பிரபல லாக் அப் ஷோவில் போட்டியாளராக இருக்கும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தற்போது கேமரா முன்பு செய்த மோசமான காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ என்பது 24 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுப்பாளராக இருக்கிறார். அமெரிக்கா சிறை போன்ற இடத்தில் 16 பிரபலங்கள் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்.
போட்டியாளர்களா, கைதிகளா 72 நாட்கள் அங்கு தாக்குப் பிடிக்க வேண்டும். மேலும் சுற்றிலும் கேமராக்களை இடையிடையே இவர்களின் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கையும் நகரும் காட்சி பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. இதில் சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், விளையாட்டு பெண்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் இடம் பிடித்திருக்கின்றனர்.முனாவர் ஃபாரூகி, சாயிஷா ஷிண்டே, பூனம் பாண்டே , பபிதா போகட், நிஷா ராவல், பயல் ரோஹத்கி, கரண்வீர் போஹ்ரா, சாரா கான், சித்தார்த் சர்மா, சிவம் சர்மா, அஞ்சலி அரோரா, அலி மெர்ச்சன்ட், சுவாமி சக்ரபாணி, மற்றும் தெஹ்சீன் பூனவல்லா உள்ளிட்ட போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சென்ற வாரம் நாமினேட் பட்டியலில் கவர்ச்சி சர்ச்சைக்கு பெயர் போன பூனம் பாண்டே இடம்பெற்றிருந்தார். இதையடுத்து அறிமுகமில்லாதவர்களுக்கு, குற்றப்பத்திரிகையில் இருந்து தன்னை காப்பாற்றினால், அவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுப்பேன் என்று பூனம் உறுதியளித்திருந்தார். அதன்பின் பூனம் பாண்டே இந்த வாரத்தில் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளராக ஆனார்.
இதனை அடுத்து பூனம் பாண்டே கேமரா முன்பு நேரலையில் தனது டி சர்ட்டை கழற்றுவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் சிறைவாசிகள் யாரும் இல்லாதபோது கேமரா முன்பு வந்த பூனம் பாண்டே தன்னை காப்பாற்றியதற்கு நன்றி கூறியதோடு தான் கூறியபடி மேலாடையை கழற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுகுறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.