சூரத் நகரில் இளைஞர் ஒருவர் 11 வயது சிறுவனை கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் பாண்டேசராவில் உள்ள ஜீவந்தீப் நகர் சொசைட்டியில் வசித்து வருபவர் சந்தோஷ் திவாரி.இவருடைய 11 வயது மகன் ஆகாஷ். 20 வயதுடைய அமன் சிவஹரெ என்ற இளைஞர் இவர்கள் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார். இதனிடையில் சிறுவன் ஆகாஷ் அடிக்கடி அமன் வீட்டுக்கு சென்று அவருடைய செல்போனை கேம் விளையாட கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அமன் தர மறுத்து கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் ஆகாஷ் செல்போன் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இரவு நெடுநேரமாகியும் ஆகாஷ் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசாரின் விசாரணையின் போது முன்னுக்கு பின்னாக பதில் கூறியதால் அவர் மீதுசந்தேகம் ஏற்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் விசாரணையின்போது அமன் ஆகாஷை கொலைசெய்து கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருப்பதை கூறினார். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.