சிறுமியிடம் செல்போன் விளையாட சொல்லித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நான்கு சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுமியிடம் செல்போனில் விளையாட சொல்லி கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று நான்கு சிறுவர்களும் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நான்கு சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். பின்னர், கைதுசெய்யப்பட்ட நால்வரும் சிறுவர்கள் என்பதால் சிறார் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.