கேரளாவின் தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் நேற்று பெங்களுருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஐக்கிய அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக முகவரிக்கு வந்த பார்சலில் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கேரள சுங்க துறையினரால் கடந்த ஜூலை 5ஆம் தேதி பிடிபட்டது. இந்த கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற 36 வயது இளம்பெண் கடந்த 5 நாட்களாகவே தலைமறைவாகவே இருந்தார்.
இவர் கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவின் ஆப்பரேஷன் மேனேஜர் பணியாளராக பணியாற்றி னார். இதையடுத்து ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கேரள முதல்வரின் முதன்மை அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அரசு செயலாளர் சிவசங்கரன் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த தங்க கடத்தலில் முதலமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
கேரள மாநில முதலமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவித்து, இதனை சட்டபூர்வமாக சந்திக்க என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷை தேடும் பணியில் கேரள மாநில போலீசாரும், மத்திய புலனாய்வு போலீசாரும் தீவிரம் காட்டி வந்தனர்.அவருடைய வாகனம் தமிழகத்துக்கு வந்திருக்கக்கூடும் என்ற நோக்கில்தான் தேசிய புலனாய்வு போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று பெங்களூரில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரை கேரளாவுக்கு அழைத்துச் செல்லும் பணி நடைபெறுகிறது.