கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கொடுங்கலூர் அம்மன் கோவிலுக்கு நடிகர் சுரேஷ் கோபி வாள் மற்றும் சிலம்பு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
கேரளாவில் உள்ள கொடுங்கலூரில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகரும், பாரதிய ஜனதா மேல் சபை எம்.பி.யுமான சுரேஷ் கோபி அடிக்கடி சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது இக்கோவிலுக்கு சென்ற நடிகர் சுரேஷ் கோபி அம்மனுக்கு வாளும், சிலம்பும் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
கொடுங்கலூர் கோவிலில் தரிசனம் முடிந்த பின்னர் அவர் திருச்சூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு பூரம் விழாவை முன்னிட்டு சமய கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார். சுரேஷ் கோபி தமிழில் அஜித்துடன் தீனா, சரத்குமாருடன் சமஸ்தானம், விக்ரமுடன் ஐ போன்ற படங்களில் நடித்துள்ளார்.