Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அடங்க மறுக்கும் கொரோனா….ஊரடங்கு கட்டாயம் தேவை…. மத்திய அரசு தகவல்…!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று தீவிரம் அதிகரித்து வருகிறது. ஓணம் பண்டிகைக்கு பின்னர் தொற்று இன்னும் தீவிரமடைந்துள்ளது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு, இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.

மேலும் கடும் கட்டுப்பாடுகளும் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. அங்க தொற்று தீவிரம் 20 சதவீதத்துக்கும் மேல் நீடித்து வருகிறது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்கும் நிலையில் அந்த பகுதிகளை கட்டப்பட்ட பகுதிகளாக அறிவிக்க அறிவிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே அம்மாநிலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரித்து ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனவும், குறிப்பாக பண்டிகை காலங்களில் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே அங்கு இரண்டு வாரங்களுக்குள் தொற்று கட்டுக்குள் வரும் என்று நிபுணர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |