Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா… ராகுல் காந்தி வருத்தம்…!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ள காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தணிந்து வருகிறது. ஆனால் கேரளாவில் மட்டும் கொரோனா அதிகரித்து வருவது தனக்கு வருத்தம் அளிக்கின்றது என்று கூறிய வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |