Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ஆப்ரேஷன் குபேரா…. தமிழ்நாட்டில் என்ன தெரியுமா?….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கந்துவட்டி கொடுமையால் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் டிஜிபி சைலேந்திரபாபு கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‘ஆப்ரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளை விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சிக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இருக்கும் நட்பு இந்த ஆபரேஷனுக்கு இடையூறாக இருக்கின்றது என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதற்கு கேரளாவின் ‘ஆப்ரேஷன் குபேரா’ தான் சரிவரும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் கமென்ட் செய்துள்ளார்.

Categories

Tech |