கேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவலின்படி, கேரளாவில் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை அடுத்த நான்கு நாட்களுக்கு கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் கொல்லம், பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 6 சென்டி மீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என்பதாகும். சிவப்பு அலாட் என்பது 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்பதாகும்.