கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவின் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். அதிலும் குறிப்பாக திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
மேலும் பலத்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் கடலில் சூறைக்காற்று வீசுகிறது. அதனால் மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.