தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. அதனால் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே கேரளாவிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்ய முடியாதவர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.