கேரளாவில் கொரோனாதேவி ஆலயம் ஒன்று உருவாகியுள்ளது, கொரோனா போரில் ஈடுபவர்களுக்காக இக்கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் வழிபட்டு தலங்கள் மூடப்பட்டநிலையில் தற்போது படிப்படியாக வழிபட்டு தலங்கள் திறக்கப்பட்டுவருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன் கடவுளை கும்பிடவேண்டியே நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டம் கடகல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகியுள்ளது இந்த ஆலயத்தை அணிலன் என்பவர் கட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை சிலையாக நிறுவி அதற்க்கு பூஜை செய்துவருகிறார்.
இது குறித்து பேசிய அவர், தொற்று நோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரையின் பாதுக்காப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்துவதாக தெரிவித்துள்ளார். தெர்மாகோல் முலம் தயாரிக்கப்பட்டு, பள்ளிவால் மீது அமர்ந்திருக்கும் கொரோனா தேவி எந்த மூலமந்திரமும் இல்லாத தெய்வம் என குறிப்பிட்டுள்ளார். இது யாரையும் கேலிசெய்யும் முயற்சி அல்ல என்றும் அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலயம் சுகாதாரப்பணியாளர், விஞ்ஞானிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர் உள்ளிட்ட கொரோனாவிற்கு எதிராக போராடுபவர்களுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளதாக அணிலன் தெரிவித்துள்ளார்.