கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வினீத் (25) என்பவர் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் கொண்டு உள்ளார். அவர்களின் பழக்கம் நாளடைவில் ஆபாச வீடியோ கால் பேசும் அளவிற்கு எல்லை மீறி சென்றது. அந்தப் பெண் ஒவ்வொரு முறை வீடியோ கால் செய்யும்போதும் அவர் அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை தனியாக லாஜிக்கு அழைத்துச் சென்ற அவர் தான் எடுத்து வைத்திருந்த ஆபாச புகைப்படங்களை காட்டி அத்துமீறியுள்ளார். தன்னுடன் உறவு கொள்ளவில்லை என்றால் இதை வெளியிடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து வினீத்தை கைது செய்தனர்.
மேலும் அவரின் மொபைலை சோதனை செய்த போது பாதிக்கப்பட்ட பெண் மட்டுமல்லாமல் பல பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்துள்ளது .எனவே இதனைப் போலவே பல பெண்களை மிரட்டி அவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.