Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கடைக்குச் செல்ல நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் ….. அதிரடி உத்தரவு…!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் அலை தணிந்துள்ள நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் நிலையில், இனி கடைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் கொரோனா தடுப்பூசி அல்லது நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |