தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பெய்து வந்த கனமழை காரணமாக இடுக்கி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதன்படி அலையின் நீர்மட்டம் இன்று 2,382.52 அடியாக உயர்ந்ததால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அணையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.