Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கனமழை… 5 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு 1-ம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நவம்பர் 2ஆம் தேதி கோட்டையம், இடுக்கி, பாலக்காடு, கோழிக்கோடு, பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |