Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்….. மாநில அரசு அறிவிப்பு….!!!

கேரள மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. முதல் அலையில் கேரளா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட.து இதனால் அங்கு தொடர்ந்து பாதிப்பு குறைந்தது. அதன் பிறகு இரண்டாவது அலையில் கேரளா பெருமளவு பாதிக்கப்பட்டது. உயிரிழப்பும் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கூடுதலாக இருந்தது. இதனால் கேரளா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

கடந்த மாதம் இறுதி வாரம் முதல் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 1ஆம் தேதி முதல் மத்திய அரசு கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொண்டது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொண்டாலும், கேரளாவில் மட்டும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தது. இப்போது அங்கு தொற்றின் வேகம் குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்ததை தொடர்ந்து நேற்று முதல் மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |