இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 23,513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், 198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 2,33,034 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.