Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தீவிரமடையும் தொற்று… நாளை முழு ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் நாளை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் கேரளா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அதுவும் ஓணம் பண்டிகைக்கு பிறகு தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த மாதம் வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது சனி மற்றும் ஞாயிறுகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை கேரளா மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் இல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்று மாநில சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. நாளை கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படும். பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |