கேரளாவில் 72 வயது பாட்டி குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா கொல்லம் மாவட்டம் ராமாபுரத்தில் சுரேந்திரன் மற்றும் சுதர்மா (72) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் சுரேந்தர்(35) இருந்த நிலையில் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். மகன் இறந்த வேதனையில் இருந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என முடிவு செய்தனர். இதுகுறித்து ஆலப்புழா அரசு மருத்துவமனை சமருத்துவர்களை சந்தித்து தங்களின் ஆசையை கூறினர்.
ஆனால் மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்தனர். ஆனாலும் சுரேந்திரன் மற்றும் சுதர்மா தம்பதியினர் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் டெஸ்ட் யூடியூப் முறையில் கருத்தரிக்க செய்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சுதர்மா ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.