கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் சில பறவைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கால்நடை துறை அதிகாரிகள் அங்கு சென்று பறவைகளின் மாதிரிகளை சேகரித்து கோபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நடைபெற்ற சோதனையின் முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் வாத்து, கோழிகள் அனைத்தையும் உடனடியாக அழிக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நேற்று ஆலப்புழா பகுதியில் உள்ள பண்ணைகளில் இருந்து சுமார் 20,000 கோழி, வாத்துகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் வசித்து வருபவர்களுக்கு ஏதேனும் நோய் தொற்று இருக்கின்றதா சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றார்கள். இதற்கிடையே கோட்டயம் பகுதியில் உள்ள சில பன்றி பண்ணைகளிலும் சுகாதார குழுவினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் ஆப்பிரிக்கன் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறியும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தொடர்பான தகவலை அடுத்த ஏழு பேர் கொண்ட மத்திய சுகாதாரக் குழுவினர் ஆலப்புழா சென்றிருக்கின்றனர் அவர்கள் அங்கு ஆய்வு நடத்த இருக்கின்றனர்.